சூரியன் உதிப்பதும்,
சூரியன் மறைவதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
இலை தளிர்வதும்,
இலை உதிர்வதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
பழம் கனிவதும்,
பழம் கசிவதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
கை மூடுவதும்,
கை திறப்பதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
ஆனால் இந்த
தேர்தல் வருவதும்,
தேர்தல் போவதும்,
புரிவதில்லை அறிவிற்கு.
கொள்ளை என்பது
கொள்கையானபின்,
சம்பிரதாயங்கள்
எதற்கு?
நீங்களே
முடிவுசெய்யுங்கள்!
யார் முதல்அமைச்சர்
என்று!
எங்களுக்கும்
நேரம் மிச்சம்!
உங்களுக்கும்
செலவு மிச்சம்!
சூரியன் மறைவதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
இலை தளிர்வதும்,
இலை உதிர்வதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
பழம் கனிவதும்,
பழம் கசிவதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
கை மூடுவதும்,
கை திறப்பதும்,
வழக்கமானவை.
புரிகின்றது அறிவிற்கு.
ஆனால் இந்த
தேர்தல் வருவதும்,
தேர்தல் போவதும்,
புரிவதில்லை அறிவிற்கு.
கொள்ளை என்பது
கொள்கையானபின்,
சம்பிரதாயங்கள்
எதற்கு?
நீங்களே
முடிவுசெய்யுங்கள்!
யார் முதல்அமைச்சர்
என்று!
எங்களுக்கும்
நேரம் மிச்சம்!
உங்களுக்கும்
செலவு மிச்சம்!
அரசியலவாதிகளின் இந்த கொள்(ளை)கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. நல்ல கருத்து!
பதிலளிநீக்கு..இசக்கிமுத்து..