மீன்கள்

சனி, 5 பிப்ரவரி, 2011

திலகபாமாவின் ‘கழுவேற்றப்பட்ட மீன்கள்’

திலகபாமாவின் நாவல், ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருக்கவேண்டியதை உணரவைக்கும் நாவல்.

நாவலின் மொழிநடை அழகியல் சார்ந்த மொழியாக உள்ளது. எல்லா இடங்களிலும் திலகபாமாவின் ஆதிக்கம் இருக்கிறது.

இந்த நாவல் மிகவும் முக்கியமானது என்பதில் மாற்றுகருத்து கிடையாது.

இது ஜனரஞ்சகமான நாவல் அல்ல. கதைமுழுவதும் நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது.  பன்முக வாசிப்பு இந்த நாவலுக்கு அவசியமாகின்றது.

"கழுவேற்றப்பட்ட மீன்கள் கடைகளில் கிடைக்கிறது!"  என்று சொல்லவும், மீன் பிரியரான என் கணவர் "ஒரு கிலோ வாங்கி வருகிறேன்!" என்று கிளம்பிவிட்டார். புத்தகம் என்றவுடன் தான் அமைதியானார்.

நவீன இலக்கியம் இன்னும் பலருக்கு புரியாத புதிர் ஆகவே இருக்கிறது.

1 கருத்து: